think loud
MUSIC PRODUCES A KIND OF PLEASURE WHICH HUMAN CANNOT DO WITHOUT
Sunday, November 30, 2025
Saturday, November 29, 2025
Tamil -Ancient
Friday, November 28, 2025
Wednesday, November 26, 2025
Tuesday, November 25, 2025
Saturday, November 15, 2025
obstetricians are glorified sweeper
முல்லை மருத்துவமனையில் வேலைப்பார்க்கும் துப்பரவு தொழிலாளர்##
வருடத்திற்கு ஒரு முறை மருத்துவமனை பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் மாத ஊதியத்தில் பத்து சதவீதம் அதிகரித்து கொடுப்பது வழக்கம் ##
தீபாவளிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு முல்லை என்னை சந்தித்து ஊதிய உயர்வு 20 சதவீதம் எனக்கு தாருங்கள் மா என்றார். அனைவருக்கும் எப்பொழுதும் 10 சதவீதம் தானே முல்லை என்றேன் ##
செவிலியர் பணி &மற்றவர்கள் பணி போல் எங்களது இல்லையம்மா என்று என்னை ஒரு பார்வை பார்த்தார். அந்த பார்வையின் அர்த்தம் எனக்கு புரிந்தது. Ac கார் Ac அறையில் இருக்கும் ஒரு மருத்துவருக்கு மலம் &சிறுநீர் கழிப்பறை சுத்தம் செய்யும் எங்கள் வேதனை எப்படி புரியும் என்பதாக.....
சரி பார்த்து செய்கிறேன் என்று அனுப்பி வைத்தேன் ##
தீபாவளி அதிகாலை 5 மணிக்கு ஆட்டோவில் பிரசவவலியுடன் ஒரு கர்பிணி பெண்ணை அழைத்து வந்தார் .முல்லை யின் அக்கா மகள் தென்காசி யில் இருந்து தீபாவளி விருந்துக்கு முல்லை வீட்டிற்கு வந்து இருக்கிறார். திடீரென்று
பிரசவ வலி வந்து விட்டது, அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று உள்ளனர். சிக்கலான பிரசவம் இங்கு பார்க்க முடியாது என்றவுடன் ஆட்டோவில் வைத்து நம் மருத்துவமனையிக்கு அழைத்து வந்து விட்டார் ##
விருந்துக்கு வந்த இடத்தில் இப்படி ஆகிவிட்டது எப்படியாவது அம்மா &குழந்தை இருவரையும் நன்றாக அனுப்பி வைக்க வேண்டும் என்று கண்கலங்கி நின்றார் ##
உடனடியாக பிரசவ அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தீபாவளி என்பதால் இரண்டு செவிலியர்கள் மட்டுமே பணியில் இருந்தார்கள். எனவே முல்லை நீயும் பிரசவ அறைக்கு வந்து உதவி செய் என்றேன் ##
பிரசவ வலி அதிகமானாலும் குழந்தை தலை வெளியில் வரவில்லை. திட்டமிட்ட பிரசவம் இல்லாததால் எனிமா கொடுக்க வில்லை , முதல் நாள் இரவு அந்த பெண் சாப்பிட உணவு முழுவதும் மலமாக என் ஏப்ரானையும் தாண்டி என் தொடை கால்களில் வழிந்தோடியது .அருகில் இருந்த செவிலியர்கள் அதை துடைத்து கொண்டு இருந்தனர் ##
Forceps delivery குழந்தையை ஆயுதம் போட்டு எடுக்கலாம் என்று முடிவு எடுத்தோம். ஆனால் எனக்கு முதுகு வலி இருப்பதால் ஆயுத பிரசவம் Forceps delivery பார்க்க கூடாது என்று நரம்பியல் மருத்துவர்கள் எனக்கு வலியுறுத்தி சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அந்த அதிகாலை மற்ற மருத்துவர்களை அழைப்பதற்கு வாய்ப்பு இல்லை .பத்து நிமிடத்தில் குழந்தை வெளியே வரவேண்டும்(Obstructed labour ) ##
ஒரு செவிலியர் என் இடுப்பை பிடித்து கொள்ள நான் ஆயுதம் போட்டு குழந்தையை வெளியே எடுத்து விட்டேன். குழந்தை மலத்தை அப்பிக் கொண்டு வெளியில் வந்தது (meconium ).குழந்தை தொப்புள் கொடி கட் செய்யும்பொழுது ஆண் குழந்தை என்பதால் வேகமாக அடித்த சிறுநீர் என் மாஸ்க்கை தாண்டி வாய் & கண்களில் தெரித்து உள்ளே சென்றது. செவிலியர்கள் அதை துடைத்து கொண்டு இருந்தனர். ##
குழந்தை நல மருத்துவரிடம் குழந்தை ஒப்படைத்து விட்டு பிரசவம் ஆன பெண்ணின் இரண்டு தொடைகளுக்கு நடுவில் அமர்ந்து வழிந்து ஓடும் ரத்த போக்கை துடைத்துக்கொண்டே அரைமணி நேரம் தையல் போடப்பட்டது (long episiotomy )##
தீபாவளி அதிகாலை 6 மணிக்கு வெளியே பட்டாசு சத்தம் & மழை சத்தம் எல்லாம் தாண்டி குழந்தை அழுத சத்தம் தான் மகிழ்ச்சியாக இருந்தது ##
இந்த காட்சியை நேரில் பார்த்து கொண்டு இருந்த முல்லை முகத்தில் பல்வேறு உணர்ச்சிகள் ##
குழந்தையை முல்லை யிடம் கொடுத்த பொழுது நன்றி மா என்று குழந்தைய வாரி அணைத்து முத்தம் கொடுத்து விட்டு என்னை ஒரு பார்வை பார்த்தார் ##
அந்த பார்வையின் அர்த்தமும் எனக்கு புரிந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு முல்லை என்னிடம் பேசியது நினைவு க்கு வந்து இருக்கும்##
தீபாவளி அதிகாலை 6 மணி பிரசவ காட்சி , Ac அறையில் இருக்கும் மருத்துவருக்கும் மலம் சிறுநீர் சுத்தம் செய்யும் நபர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று தெரியும் என முல்லை க்கு புரிந்து இருக்கும் ##
மகப்பேறு மருத்துவர்கள் பணியும் முல்லை போன்றவர்கள் பணியும் ஒப்பீடு சரியா என பதிவை படிப்பவர்கள் நினைக்கலாம் ##
இரண்டு பேரின் சகிப்புத்தன்மை ஒன்று தான், ஆனால் மருத்துவர்களின் சகிப்புத்தன்மைக்கு இந்த சமூகம் கொடுக்கும் மரியாதை, புகழ் ,பொருளாதார வசதி, அங்கீகாரம் எதுவும் முல்லை போன்ற பணியில் இருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை ##
உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்காத எதுவும் மனதுக்கு வேதனையாக த்தான் இருக்கும் ##
Of course obstetricians are glorified sweeper but we like to do it ##
ஒரு மருத்துவரின் பதிவு
Friday, November 14, 2025
Tuesday, November 11, 2025
Is this true ?