The intention of this blog is only to share the collections. Inadvertently if any file is under copyright, please intimate me so that it can be removed forthwith.

Sunday, July 20, 2025

Amma !!!!!!!!!!!!!

 சுகப்பிரசவம் எப்படின்னு கேள்விப்பட்டிருப்பீர்கள். 🤰

எழுத்தால் படித்து பார்த்து கண் கலங்கியதுண்டா?

இதைபடியுங்கள்!!! 🤱

மனது கலங்கும்..!!😥

முதலில் வலபக்க இடுப்பில் சுரீரென்ற குத்தல், பின்னர் இடைவெளி விட்டு மீண்டும், இடைவெளி விட்டு மீண்டும், இப்படியே தொடர்ந்து நடு வயிறு வலி ஆரம்பிக்கும் போது குழந்தை, தான் பிறக்கப் போகும் நேரத்தை முடிவு செய்துவிட்டது என்று அர்த்தம்...

புதிய உலகை காண வேண்டும் என்று குழந்தைகள் முடிவு செய்த பின், அதற்கு முதலில் இது வரை வாழ்ந்து வரும் கருவறை உலகில் தனக்கான வாழ்வாதரத்தை அழிக்கும் பனிக்குடத்தை அது உடைக்கும். அங்குதான் குழந்தை சுவாசிக்கும், நீந்திகொண்டிருக்கும்.

அதை உடைத்த பின் புதிய வாழ்வாதாரத்திற்கான வழி நோக்கி முன்னெடுக்கும் போது பிரசவ வலி உச்சத்தில் இருக்கும். (முழு பனிக்குட நீரும் வெளியேறும் முன் மருத்துவமனை சென்றுவிட வேண்டும்) மொத்த வயிறும் வலிக்கும், சீராக சுவாசிக்க முடியாது. அதிக பதட்டம், இந்த நேரத்தில் பெண் வேண்டுவதல்லாம் கணவனின் கரத்தை இறுகப் பற்றுதல் தான். அந்த நேரத்தில் வேறு யாரையும் தேடாது புருஷன் புருசன் புருசன் மட்டும்தான்.

முதலில் இனிமா கொடுத்து வயிற்றை சுத்தம் செய்வார்கள். ஏற்கனவே வயிறு வலி, இதுல இது வேற. இப்ப கால் இரண்டையும் விரித்து வைத்துக் கொள்ளச் செய்வார்கள். அப்போது வலி முதுகுத்தண்டை தாக்க ஆரம்பித்திருக்கும். எப்படி என்றால் கத்தியை எடுத்து முதுகுதண்டின் டிஸ்க்களுக்கு இடையில் சொருகினாள் எப்படி இருக்குமோ அப்படியான வலி. ஒரு நர்ஸ் நெஞ்சு மேல் ஏறி வயித்த பார்க்க உக்காந்து தன்னோட இரண்டு கால் முட்டுகளால் மேல்வயிற்றின் இரண்டு பக்கங்களில் இருந்தும் அழுத்தம் கொடுக்கும். கைகளால் மேல் வயிற்றை கீழாக தள்ளும்.

டாக்டர் முக்கு முக்குன்னு சொல்வார்கள், சீசேரியனில் மட்டும்தான் மயக்க மருந்து கொடுத்து பிரசவம் நடக்கும். அது சீசேரியன் கத்திய வச்சி அறுப்பாங்க அப்பறம் தையல் எல்லாம் போட வேண்டுமே அதனால் என்கின்றீர்களா? நிற்க சுகபிரசவத்திலும் தையல் போட வேண்டும் அது வயிற்றில் கிடையாது பிறப்புறுப்பு ஒரு குறிப்பிட்ட அளவிற்க்கு மேல் விரிவடையாத சூழல் இருக்கும் போது. கத்தரிப்பான் போன்ற தோற்றத்தில் தேங்காய் உரிக்கும் உபகரணம் பார்த்து இருக்கிறீர்களா? தேங்காயில் அதன் கூர்மையான முனை கொண்டு ஒரு குத்து குத்தி இரண்டாக பிளக்க வேண்டும். அதே மாதிரி ஒரு உபகரணம் கொண்டு பிறப்புறப்பில் செலுத்தி அதன் கைப்பிடியை விரித்து ஒரு திருக்கு.

அங்கயே கண்ணுரென்டும் சொருகிடும் செத்தே போய்டுவோம்னு தான் தோணும். ஆனா குழந்தையாட தலை வெளில தெரிது Push push push ன்னு சொல்ல, “டாக்டர் முடியல டாக்டர்” என்பாள். ஏம்மா உனக்கு வலிக்கிர மாதிரி தான் உன் குழந்தைக்கும் வழிக்கும் அதோட வலியை குறைக்கனும்னா நீ சீக்கிரம் முக்கி பிள்ளைய பெத்துக்கனும் அப்பறம் உன் இஷ்டம் னு சொல்லுவாங்க அப்போ வரும் ஒரு வெறி பாருங்க, நரம்புகள் முருக்கி உடம்பின் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி ஓரிடத்தில் குவித்து முப்பது நொடி அளவில் நீண்ட முக்குதல் முக்கி பிறப்புறுப்பை கிழித்துக்கொண்டு குழந்தை வந்து விழும்.

என்ன குழந்தை என்று சொல்லிய பின் குழந்தையை குளிப்பாட்ட கொண்டு போயிடுவாங்க. ஹப்படா என்று நிம்மதியில் கொஞ்சம் ஆசுவாசம் அடையும் போது கிழிந்த பிறப்புறப்பை டாக்டர் தைக்க ஆரம்பித்து இருப்பார். எது வரை உறுப்பு கிழிந்து இருக்கும் தெரியுமா? மலத்துவாரத்தின் மேற்பகுதி வரை. இந்த டாக்டர் அப்பயும் மயக்க ஊசி போடமாட்டார். அதெல்லாம் கொடுமையிலும் கொடுமை. அப்பறம் பெட் எல்லாம் மாத்தி புதுசா வார்ட் ரூம்ல கூட்டிட்டு போயி விட்ருவாங்க. Actually தூக்கிட்டு போயி குழந்தைக்கு பால் கொடுக்கனும்..

அந்த பச்சை குழந்தைக்கு கண்ணும் முழிச்சு இருக்காது பாலும் எப்படி உறுஞ்சி குடிக்கனும்னும் தெரியாது ஆனா பசில அழும் பார்க்கவே பாவமா இருக்கும். பாலை கொஞ்சம் பீச்சி அதோட வாய்ல விட்டுட்டு காதை தடவி கொடுத்தா உரிஞ்சி குடிக்க ஆரம்பிச்சிடும். இன்று வரைக்கும் தீராத ஆச்சரியமாக இருக்கிறது அது எப்படி காதை தடவினா உரிஞ்சு குடிக்க தோனுதுன்னு? எது எப்படியோ என்னிலுருந்து பிறந்த என்னுயிர் இன்னொருநான் எனக்கான பசியை என்னிடமே தீர்த்துக் கொள்வது போல இருக்கும் அந்தக் குழந்தையின் பால் குடித்தல். அது வரை உடல் அனுபவித்த கஷ்டங்களுக்கு மனதின் பாரம் குறையும்.

படிக்கும் போதே மனது கண்ணீரில் நனைகிறதா? அப்படியானால் இதை தாங்கும் பெண்...?🤰🤱

உண்மையில் தலையில் தூக்கி வைத்து கொண்டாடபட வேண்டிய ஓர் ஜீவன் என்றால் அது தாய்தான். 🤱அவளை கடைசி வரை ஒரு குழந்தையாக பார்த்து கொள்வது ஒவ்வொருவர் கடமை... 🥺🥺

No comments: