The intention of this blog is only to share the collections. Inadvertently if any file is under copyright, please intimate me so that it can be removed forthwith.

Sunday, December 29, 2019

MODI



இது தான் ஒரு தலைவனின் ராஜ தந்திரம்
#வல்லரசாக இவ்ளோ வேலை இருக்கா...
#சீனாவை வீழ்த்த மோடி போடும் புதியபாதை....
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நூற்றாண்டி
லும் ஒரு சிறந்த தலைவரை காலம் பரிசாக
அளித்துக் கொண்டே இருக்கும்.அந்த தலைவரை அந்த நாடு சரியாக பயன்படுத்தி கொண்டால் அந்த நாட்டின் அடையாளம் மாறி விடும்.. அப்படி இந்தியாவுக்கு கிடைத்துள்ள தலைவர் தான் மோடி.
வர்த்தகம் என்கிற பெயரில் இந்தியப் பெருங்கடலை முன் வைத்து இந்தியாவுடன் மோதி வரும் சீனாவுக்கு, அதே வர்த்தகம் என்கிற பெயரில் சீனப்பெருங்கடலில் புதிய பாதை போட்டு சீனாவிடம் விளையாட ஆரம்பித்து விட்டார் மோடி.
சீனாவிடம் மோதுவதற்கு மோடி துணைக்கு
அழைத்து வரும் நாடு எது தெரியுமா? ரஷ்யா
தான் .
இனி வரும் காலங்களில் ரஷ்யாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் அதிகளவில் வர்த்தகம் நடைபெற இருக்கிறது. அதுவும்
எங்கு தெரியுமா? சீனாவின் தென் கிழக்கு
எல்லையான தென் சீனக்கடலின் வழியாகவே ரஷ்யாவும், இந்தியாவும் வர்த்தகம் செய்ய
இருக்கின்றன.
.
இப்பொழுது ரஷ்யாவின் கிழக்கு ரீஜியனில் உள்ள விளாடிவோஸ்டோக் நகரில் ரஷ்யா நடத்திய வர்த்தக மாநாட்டில் மோடி எதற்கு
கலந்து கொண்டார் தெரியுமா? இந்த வர்த்தக
ஒப்பந்தம் செய்வதற்கு தான்.இதன் மூலமாக
இனி ரஷ்யாவின் விளாடிவோ ஸ்டோக் நகரமும் நம்முடைய சென்னையும் வர்த்தகரீதியாக இணைய இருக்கிறது.
இது வரை ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும்
இடையே வர்த்தகம் ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமும் ரஷ்யாவின் மிகப்பெரிய துறைமுகம் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்திற்கும் மும்பை துறைமுகத்திற்கும் இடையே தான் நடைபெற்று வருகிறது.
அதாவது ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க துறைமுகத்தில் இருந்து மும்பைக்கு வரும் கப்பல்கள் பின்லாந்து வளைகுடா பால்டிக் கடல் கட்டிகாட் கடல் வடக்கு கடல் இங்கிலீஸ் கால்வாய், பிஸ்கே வளைகுடா, வடக்கு அட்லாண்டிக் கடல், நைல்நதி சூயஸ் கால்வாய், செங்கடல் வழியாகஆடம் வளைகுடாவுக்குள் நுழைந்து அப்படியே அரபிக்கடலில் கலந்து மும்பை
துறைமுகத்திற்கு வந்து போய் கொண்டு
இருக்கின்றன.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர் ஸ்பர்க்
துறைமுகத்திற்கும் இந்தியாவின் மும்பை துறைமுகத்திற்கும் இடையே உள்ள தொலைவு எவ்வளவு தெரியுமா? 8675 நாட்டிகல் மைல் தொலைவு இருக்கிறது.
ஒரு முறை ரஷ்யா வில் இருந்து
இந்தியாவுக்கு சரக்கு கப்பல்கள் வருவதற்கு
மட்டுமே குறைந்தது 40 நாட்களாகி விடும்.
இதனால் தான் இந்தியா ரஷ்யா உறவு வலுவாக இருந்த கடந்த நூற்றாண்டிலேயே
வியாபாரம் படு மந்தமாக இருந்தது. இதனால்
தான் எதிரியாக இருந்தாலும் சீனாவோடு இந்தியாவின் வர்த்தகம் அதிகரித்து கொண்டே இருந்தது.இதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டுமானால் ரஷ்யா இந்தியா இடையே வர்த்தகம் அதிகரிக்க வேண்டும் என்று மோடி நினைத்தார்.
இதற்கு இவர் எடுத்துக் கொண்ட முயற்சி தான் விளாடிவோஸ்டோக் மற்றும் சென்னை
இடையே கடல் வழி பாதை உருவாக்கம். இந்த
விளாடிவோஸ்டோக் நகரம் ரஷ்யாவின் கிழக்கு துருவம் .நம்முடைய வட கிழக்கு மாநிலங்களைப்போல வளர்ச்சி அடையாத பூமி.
இதனை வளமாக்க ரஷ்யா அங்கு ஈஸ்டர்ன் எக்னாமிக் ஃபாரம் என்கிற அமைப்பின்
பெயரில் வர்த்தக மாநாடுகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி உலகநாடுகளை விளாடிவோ ஸ்டோக் நகரில் முதலீடு செய்யும் படி தூண்டி வருகிறது. ரஷ்யா.இந்த ஆண்டு நடைபெறும் வர்த்தக மாநாட்டில் மோடிதான் சீஃப் கெஸ்ட்
இதில் கலந்து கொண்ட மோடி இனி ரஷ்யா
இந்தியா இடையே நடைபெறும் வர்த்தகம்
விளாடிவோஸ்டோக் மற்றும் சென்னை இடையே நடைபெறும் என்று அறிவித்து இருக்கிறார். அதோடு இந்தியா ரஷ்யா இடையே பல் வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது.
இதனால் இதுவரை 8 பில்லியன் டாலர்களில்
இருந்த இந்தியா ரஷ்யா இடையேயான வர்த் தகம் வருகின்ற 2025 ம்ஆண்டிற்குள் 30 பில்லியன் டாலரை எட்டி விடும் என்று அறிவிக்க ப்பட்டுள்ளது. இந்தியா ரஷ்யா இடையே புதிய கடல் வழி பாதையாக விளாடிவோ ஸ்டோக் நகரையும் சென்னையையும் அறிவித்து மோடி ஒரே கல்லில் நான்கு மாங்காய்களை அடித்து இருக்கிறார்.
#ஓன்று ; ரஷ்யா இந்தியா இடையே உள்ள
வர்த்தக பாதையின் தொலைவு இப்பொழுது 8675 கடல் மைல் தொலைவில் இருந்து 5647
கடல் மைல் தொலைவாக குறைந்துள்ளது.
சுமார் 3000 கடல் மைல் தொலைவு குறைந்துள்ளதால் இதுவரை இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு கப்பல் செல்ல ஆகிய காலமான 40 நாட்கள் என்பது இனி 24 நாட்களாகி விடும். இதனால் காலஅளவு மிச்சம். எரிபொருள் செலவு மிச்சமாவதோடு போக்குவரத்து விரைவாக நடைபெற்று அதிகமாக ஆரம்பிக்கும்
#இரண்டாவது ; இது வரை தென் சீன கடல் பகுதி தனக்கு தான் சொந்தம் என்று கூறி வரும் சீனாவை, இனி ரஷ்யா அதெல்லாம் கிடையாது தென் சீனக்கடல் பகுதி அனைவருக்கும் சொந்தம் என்று அதட்ட ஆரம்பிக்கும்.
ஏனெனில் ரஷ்யாவுக்கு இந்தியாவின் பிசினஸ் முக்கியம் என்பதால் சீனாவை தட்டி வைக்க ஆரம்பிக்கும்.
ஏற்கனவே தென் சீன கடல் பகுதி அனைவருக்கும் பொதுவானது என்று அமெரிக்காவும் கூறி வருகிறது,, இப்போது ரஸ்யாவும் கூறினால் சீனாவால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்படும்
#மூன்றாவது ; இந்த சென்னை விளாடிவோ ஸ்டோக் இடையே உள்ள கடல்வழிப் பாதை
சீனாவின் தென் சீனக்கடல் மற்றும் கிழக்கு
சீனக்கடல் பகுதிகளின் வழியாகத்தான்
வருகிறது. இதில் கிழக்கு சீன கடல் பாதையில் ஜப்பான்,மற்றும் தென் கொரியா நாடுகள் இருக்கிறது. தென் சீனக்கடல் பகுதிகளில் வியட்னாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள்
இருக்கின்றன.
ரஷ்ய இந்தியா இடையே சென்னை விளாடி வோஸ்டோக் இடையே வர்த்தகம் ஆரம்பிக்கும் பொழுது, அதன் பாதையில் உள்ள ஜப்பான், தென் கொரியா, வியட்னாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் சென்னைக்கும் இடையே வர்த்தகம் அதிகரிக்கும். இதனால் நம்முடைய
சென்னை வரும் காலங்களில் இந்தியாவின்
வர்த்தக தலைநகராக மாறவும் வாய்ப்புகள்
இருக்கிறது.
#நான்காவது ; ஏற்கனவே தென் சீன கடல் பகுதியில் உள்ள அத்தனை நாடுகளிடமும் சீனா சண்டை போட்டு வருகிறது, இந்த அத்தனை நாடுகளும், சீனாவை ரவுண்ட் கட்ட காத்திருக்கும் பொழுது வர்த்தகம் என்கிற பெயரில் தென் சீனக்கடலில் நுழையும் இந்தியா, வரிசையாக அங்குள்ள அனைத்து நாடுகளிலும் பாதுகாப்பு என்கிற பெயரில் கடற்படை தளங்களை அமைத்து கொள்ளும்.
இந்தியாவின் இந்த முயற்சியை சீனா முறியடிக்க வேண்டும் என்றால் ரஷ்யாவை மற்றும் அமெரிக்காவை பகைக்க வேண்டும்,, இந்த நாடுகளையும் பகைக்க கண்டிப்பாக சீனாவால் முடியாது இது தான் ஒரு தலைவனின் ராஜ தந்திரம் என்பது
மேலும் தென்சீன கடல் பகுதியில் இந்தியா வலிமை அடையும். இதனால் எதிர்காலத்தில் இந்தியா சீனா இடையே போர் வந்தால்
சீனாவை அதன் கோட்டையிலேயே இந்தியா
சந்தித்து முறியடிக்கும் வல்லமை பெற்று விடும்..
வர்த்தகம் என்கிற பெயரில் இந்தியப் பெருங்
கடலில் நுழைந்து இந்தியாவுக்கு குடைச்சல்
கொடுத்து வரும் சீனாவுக்கு அதே வர்த்தகம்
என்கிற பெயரில் தென்சீன கடலில் நுழைந்து
சீனாவுக்கு குடைச்சல் கொடுக்க மோடி போட்டுள்ள புதிய பாதை தான் இந்தியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் சென்னை டூ விளாடிவோஸ்டோக் கடல் வழிப் பாதை.
இது தான் ஒரு தலைவனின் ராஜ தந்திரம் என்பது

Courtesy : facebook