The intention of this blog is only to share the collections. Inadvertently if any file is under copyright, please intimate me so that it can be removed forthwith.
Showing posts with label Tamil kavidhaigal. Show all posts
Showing posts with label Tamil kavidhaigal. Show all posts

Wednesday, October 31, 2012

What a Tamil poem !!




கற்பகம்
கதைப் புத்தகம் படிக்கும்போது சொல்வாள்;
நான் எழுத்தாளாராகிவிடுவேன் என்று.
அழகான ஓவியங்களைப் பார்க்கையில்,
அற்புதமான ஓவியராகப் போகிறேன் என்பாள்.
இனிமையான பாடல்களை கேட்கும்போது,
இனி நான் பாடகிதான் என்பாள்.
ஒரு நேரம் நிருபர் என்பாள்
பிறகு புகைப்பட கலைஞி என்பாள்
இறுதியில்
சுப்ரமணியன் மனைவி ஆகிவிட்டாள்.
courtesy: Chu, Juliet Mariavilli (Ananda Vikatan)

When I read this "kavidhai" I was alone. My body and mind were so excited, that I felt like sharing with somebody. How a truth about our Indian girls is so deeply expressed in such simple words. Hats off to the poet. I am yet to get out of the impact and I will never, since this was my feeling all along my life.

Anonymous Anonymous said...
Can you pls type the same in english without tranlation ??
November 1, 2012 6:39 PM
Here it is:
Karpagam
Kadhai puththagam padikkumbodhu solvaal
Naan ezhuththaalaraagividuven endru.
Azhagaana oviyangalai paarkkaiyil
Arpudhamana oviyaraaga pogiren enbaal
Inimaiyaana paadalgalai ketkumbodhu
Ini naan paadagidhan enbaal
Oru neram nirubar enbaal
Piragu pugaipada Kalaigni enbaal.
Irudhiyil
Subramanian manaivi aagivittaal


Wednesday, October 10, 2012

Anbu magane




அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!
வசதியாகத்தான் இருக்கிறது மகனே

நீ கொண்டு வந்து சேர்த்த
முதியோர் இல்லம்
பொறுப்பாய் என்னை
 
ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறிய போது
முன்பு நானும்
இது போல் உன்னை
வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால்
நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது
!

முதல் தரமிக்க
இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்றே
ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன்
!

இதுவரையில்
ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும்
என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை
மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக
மனம் மகிழ்ச்சியடைகிறது
நீ விடுதியில்
தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க மறுத்ததன்
எதிர்வினையே இதுவென்று
இப்போது அறிகிறேன்
!

இளம் வயதினில்
நீ சிறுகச் சிறுக சேமித்த
அனுபவத்தை
என் முதுமைப் பருவத்தில்
மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய்



ஆயினும்........
உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு.
நான் கற்றுக் கொடுத்தேன்
உனக்கு.......
வாழ்க்கை இதுதானென்று.

நீ கற்றுக் கொடுக்கிறாய்
எனக்கு
உறவுகள் இதுதான் என்று.

இந்த கவிதையை படித்ததும் கண்கள் குளமாகியது. எவ்வளவு யதார்த்தமும் வலியும் இந்த கவிதையில் அடங்கியுள்ளது. இந்த பெயர் தெரியாத கவிஞரை பாராட்டுவோம்.


Blogger sury Siva said...
I strongly feel that one has to live with dignity and grace and in case the children are in such a position that they can hardly be of any physical support in view of their present professional environment, the parents will have to ways to be at peace with themselves.
Frankly, I am in search of a Home, where I can spend the rest of my life.

Maatha cha parvathi Devi
Pitha devo Maheswaraha.
Bhandavaa Shiva Bhakthaas cha
Swadesho Bhuvana thrayam.


subbu rathinam
October 10, 2012 9:37 PM
 Delete


Saturday, June 16, 2012

Manasu valikkudhu

Tuesday, May 15, 2012

I am sharing a poem which I enjoyed with a heavy heart !




Even though I read this " kavidhai" few days back in Anandavikatan, and wanted to share with you all, I could not do it, because, I could not find an appropriate photo for this posting. Unfortunately, I could see this photo of Tharuni today after her untimely death in the plane accident at Nepal. With heavy heart, NOW I am posting this "kavidhai" .

சுட்டு விரலை கன்னத்தில் வைத்து
கண்களை மூடி யோசித்து
தலையை பக்கவாட்டில் அசைத்து
கீழ் உதடு பிதுக்கி
தோள்களை குலுக்கி
கைகளை விரித்து
தெரியவில்லை என்று சொல்லும்
அழகை ரசிக்கவே
தினமும் கேட்கிறேன்
எதிர் வீட்டு சிறுமியிடம்
விடை தெரியாக் கேள்விகளை.

- இரவி. நந்த பாலா

courtesy: Aananda vikatan

Anonymous Anonymous said...
what a poem!what a picture! my heart weeps for Tharuni.
May 16, 2012 10:47 AM

Friday, February 26, 2010

Some "Kavidhaigal" you might have not read

"அனாதைகள்
கடவுளின் குழந்தைகள்"
என்றால்
கடவுளுக்கும்
கட்டாயம் வேண்டும்
"குடும்பக்கட்டுப்பாடு"

I do not know who wrote this. I was told "Kamal Hassan" penned this.

Thursday, March 12, 2009

some " kavidhaigal" you might have not read


மூச்சு முட்டக் குடித்து
முழி பிதுங்க தின்று
கும்பலாய் புகை ஊதி
கூத்தியாள் வீடு தேடி
விடிந்ததும்
ஓடுகிறான்
கடற்கரையீல்.
காற்று வாங்குவது
நல்லதாம்.

*************


நெருப்பின் நாக்கு
நிரூபித்த கற்பை,
ஒரு வண்ணானின் நாக்கு
அழுக்காக்கியது.
- அப்துர் ரஹ்மான் - (பால்வீதி)

Anonymous Datchinamurthy said...

மிக அருமையான
கவிதைகள்
குறிப்பாக ராமாயணம் சொல்லும்
அந்த கவிதை மிக அழகு
நான் அந்த பால் வீதி புத்தகத்தை
தேட தொடங்கிவிட்டேன்

நன்றி
ஆனால் இத்துடன் நின்று விட்டதே
உங்கள் கவிதை பகிர்வு
நீங்கள் அதை மீண்டும் தொடங்கும்படி
கேட்டுகொள்கிறேன்
December 1, 2011 5:23 AM