அப்பா கட்டிய வீடாயிருந்தாலும்
Sunday, June 7, 2026
Can The GEN Z kids experience this !!i
Thursday, June 4, 2026
Will GEN Z girls accept this ?
*ப்ளீஸ்*
என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா..
ஆனால் அம்மா அப்படி இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை.. மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும், அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்.. எதுக்குமே மசிய மாட்டார்!!
கோபம் தலைக்கேறி அழுது புலம்புவதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்? கடைசியில்தான் தெரியும் நான் விரும்பியது 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும்..
இப்படி அம்மாவின் பல கண்டிப்புக்களும், திட்டுக்களும் என்னை மீட்கவே செய்தது பிரமிப்பின் நீளம்!! வசவுகள் எல்லாமே எனக்கு தடுப்பு வேலிகளாகவே இருந்திருக்கிறது.. இறுதியில் தோற்று போனது ஒன்றுக்கும் உதவாத என் பிடிவாதமாகத்தான் இருந்திருக்கிறது!!
கிச்சனில் அம்மா வியர்க்க விறுவிறுக்க எங்களுக்காக சுயமரியாதையை தொலைத்து நின்றிருந்த தருணங்கள் ஏராளம்.. *துணி காயப்போடு,*
*பீரோவை அடுக்கி வை..*
*மதியானத்தில் தூங்காதே..*
*எப்ப பாரு என்ன டிவி?*
*புக் எடுத்து படி...*
*வீட்டு வேலை செய்*,
கல்யாணம் பண்ணி போற இடத்துல என்ன நினைப்பாங்க, சரியா வளர்க்கலேன்னு என்னை திட்ட மாட்டாங்களா" என்று நை.. நை.. புகைச்சல் காதில் விழும்போதெல்லாம் உச்சத்தின் எரிச்சலுக்கு என்னை இட்டு சென்றது..
இன்று
*சாம்பார் சூப்பர்,*
*வத்தக்குழம்பு சூப்பர்*
என்று அடுத்தவர் என்னை பாராட்டும்போதுதான் அந்த குடைச்சலின் பெருமை துளிர்த்து எட்டி எட்டி பார்த்தது! மெல்ல என் மர மண்டைக்கு விஷயம் ஏற ஆரம்பித்தது..
*இதிலும் நான்தான் தோற்று போனேன்*.
இருந்தாலும் இந்த அம்மாவுக்கு இவ்வளவு கல்நெஞ்சம் இருக்கக்கூடாது.. அப்போதுதான்
*நூடுல்ஸ் வந்த புதிது..*
அதன் மீது அப்படி ஒரு பிரியம் வந்துவிட்டது.. ஒருநாள் அதை வாங்கி சாப்பிட 5 ரூபாய் கேட்டால்கூட என் அம்மா கறார்தான்.. தர முடியாது என்ற ஒற்றை வார்த்தையை அழுத்தமாக சொல்லிவிட்டார்..
*உங்க சமையல் வெறுப்பா இருக்கும்மா, நூடுல்ஸ்தான் வேணும்*
என்று அழுதாலும் ஒரு பதிலும் அங்கு வரவே வராது..
5 ரூபாய் தராத அம்மா எல்லாம் ஒரு அம்மாவா? என்று நொந்து போய் அழுதடியே அன்று தூங்கிவிட்டேன்.
மறுநாள் காலை தூங்கி எழுந்தால், வீட்டுக்கு வந்த பாத்திர வியாபாரியுடன் அம்மா பேசி கொண்டிருந்தார். அந்த வியாபாரி கையிலும், சுற்றிலும் புதுபுது பாத்திரங்கள் கண்ணை கூசின.
*ஆமா.. எல்லா பாத்திரத்திலயும் என் பொண்ணு பேர் பெரிசா பொறிச்சிடுங்க..*
செலவு பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க என்று சொல்லி கொண்டிருந்தார்.. இன்று வரை ஒரு டம்பளரில் தண்ணீர் எடுத்து குடித்தாலும் அதில் உள்ள என் பெயர் என்னை குத்தி காட்டி கொண்டே இருக்கிறது.
*ஏனோ தெரியவில்லை, இப்போதுவரை நூடுல்ஸ் சாப்பிடும் எண்ணமும் எனக்கு வரவே இல்லை*.
இந்த விஷயத்திலும் நான்தான் தோற்று போனேன்!!
ஓயாத குடைச்சல், எப்பவுமே திட்டு, எப்பவுமே ஒரு அட்வைஸ், எதுக்கெடுத்தாலும் ஒரு பிளாஷ்பேக், அம்மா எப்பவுமே இப்படித்தானோ என்ற நினைப்பு இளம்வயதில் வந்தபடியே இருந்தது.
நான் பிரசவ வார்டில் இருந்தபோது, *அம்மா* என்று எத்தனை முறை கூப்பிட்டிருப்பேன் என்றே தெரியாது, குழந்தையை பெற்று கொண்டு வீடு வந்து சேர்ந்ததும் அவர் ஒரு நிமிடம் சும்மா இல்லையே..
இதை சாப்பிடு
அதை சாப்பிடாதே
இதை குடி
இப்படி திரும்பு
அப்படி படு,
குழந்தையை இப்படி பிடிச்சு தூக்கு
என்று சொல்லி கொண்டே இருந்தார். அவ்வளவு காலம் இல்லாமல், அம்மாவின் வயிற்றில் தழும்புகள், வடுக்களை அப்போதுதான் பார்த்தேன்.. பிரசவ போரில் நான் தந்த பரிசு போலும்.. நடுமண்டையில் சுரீரென்று எனக்கு உரைத்தது.. அம்மா எப்பவும் போலவேதான் இருக்கிறார்.. நான்தான் ஒவ்வொன்றிற்கும் எரிச்சல், குடைச்சல், என டிசைன் டிசைனாக பெயர் வைத்து கொண்டு இருந்திருக்கிறேன் என்று!!
*இப்போதும் நான்தான் தோற்றேன்!*
என் மகள் குட்டி தேவதை போலவே இருப்பாள் என்று கற்பனை செய்து கொண்டு, தையல் மிஷினில் கைத்தறி துணியில் பாவாடை தைத்து உடுத்தி அழகு பார்க்கும்போதுகூட, எனக்கு கண்ணில் பட்டது என்னவோ அதில் தொங்கி கொண்டும், ஒட்டிக் கொண்டும் இருந்த கலர் கலர் நூல்கள்தான்.. "இந்த டிரஸ் நல்லா இல்லைம்மா, நூல் நூலா தொங்குது.. இதை பார்த்தா என் பிரண்ட்ஸ் கிண்டல் செய்வாங்கன்னு" தைத்த 2 நிமிசத்துலயே கழற்றி முகத்தில் எறிந்த நிகழ்வின் காலம் உருண்டாலும் இன்னமும் வலித்து கொண்டே இருக்கிறது.
"இவ்ளோ பெரிய பெண்ணாகியும் இன்னும் ரிப்பன் வைத்து சடை பின்னிக்க தெரியலயா, என்ற அம்மா திட்டிய அதே வார்த்தைகளை இன்று என் மகளிடம் என்னையும் அறியாமல் சொல்வது வியப்பாக உள்ளது! எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என் அம்மா!! இந்த விஷயத்திலும் நான்தான் தோற்று நிற்கிறேன்.
ஏனோ தெரியவில்லை.. என்னை பார்க்கும்போதெல்லாம் ஓயாமல் சொல்லும் பொய்
*ஏன் இப்படி இளைச்சிட்டே, ஏன் இப்படி கறுத்து போயிட்டே* என்பதுதான்..
*தட்டில் சட்னி மீதமிருக்குது பாரு, அதுக்காக இன்னும் ஒரே ஒரு தோசை*
என்று சாக்கு சொல்லி சுடச்சுட சுட்டுப்போடும் அலாதியே இன்றும் தனி அழகுதான்.. சாப்பிட்டு முடித்த பிறகு தான் தெரியும் சட்னியை முன்கூட்டியே தட்டில் அதிகமாக ஏன் வைத்தார் என்று?
அந்த அன்பின் சூட்சுமம்கூட தெரியாமல்
*அப்போதும் நான்தான் தோற்று நிற்பேன்!!*
எத்தனை விஷயத்தில்தான் நான் இப்படி தோற்று கொண்டே இருப்பேனோ தெரியாது.. இந்த தொடர் தோல்வி எனக்கு பிடித்திருக்கிறது.. காரணம், என் அம்மா சளைக்காமல் வெற்றி பெற்று கொண்டே இருப்பதால்!!!
*உலகின் தலை சிறந்த முதல் தியாகி அம்மா மட்டுமே*
சொக்கி போகும் முதல் உலக அழகிகளும் இவர்களே!!
உலகின் மிக பெரிய பொருளாதார மேதையுமே அம்மா மட்டுமே!!
*எத்தனை இடர்பாடுகள்*,
*எத்தனை துயரங்கள்,*
*எத்தனை வலிகள்*
வந்தால் என்ன?
உலக உருண்டையில் கலந்துவிட்ட இந்த தாய்மையானது அனைத்தையும் புரட்டி போட்டு கொண்டு மேலே சென்று கொண்டே இருக்கும்!!
எல்லா அம்மாக்களுக்கும் சமர்ப்பனம்!!
Saturday, May 2, 2026
Amma !!
மத்திய பிரதேசத்தின் நர்மதா நதியில் சுற்றுலா சென்றபோது படகு கவிழ்ந்த விபத்தின் செய்தியை நாமெல்லாம் அறிந்தோம்.
டெல்லியில் இருந்து வந்த அந்த நால்வர் கொண்ட குடும்பத்தில், தந்தையும் மகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால், அந்த தாயும் நான்கு வயது மகனும் உயிரிழந்தார்கள்.
நேற்று காலை மீட்பு பணியாளர்கள் அவர்களின் உடல்களை கண்டுபிடித்த போது, அந்த காட்சியை பார்த்த அனைவரின் கண்களும் நீர்த்தது.
அந்த தாயின் கைகள், மரணம் வந்தாலும் கூட, தனது குழந்தையை மார்பிலிருந்து பிரிக்கவில்லை!
நீரில் மூழ்கி மூச்சு விட முடியாமல் தவித்த அந்த கடைசி நொடிகளிலும், தன் உயிரைப் பற்றி அல்ல — தனது குழந்தையை எப்படி இருந்தாலும் காப்பாற்ற வேண்டும் என்பதையே அவள் நினைத்தாள்.
எவ்வளவு பெரிய ஆபத்து வந்தாலும், ஒரு தாயின் முதல் மற்றும் கடைசி எண்ணம் தனது குழந்தைகள்தான் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நிரூபிக்கிறது.
கடைசி மூச்சு வரை, தனது குழந்தைக்கு ஒரு சின்ன சேதமும் ஏற்படாதபடி, அவள் அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டிருந்தாள். அவனை காப்பாற்ற முடியாமல் போயிருக்கலாம்… ஆனால், மரணத்தின் அந்த குளிரில் அவனை தனியாக விட அந்த தாய்மனம் சம்மதிக்கவில்லை. இறுதியாக மரணத்தை நோக்கிச் செல்லும்போதும், தனது மார்பின் சூட்டை அவனுக்கு அளித்து அவனை அணைத்துக்கொண்டிருந்தாள்.
இந்த உலகில் மாற்றிக்கொள்ள முடியாத உணர்வு ஒன்று இருந்தால் அது தாயின் அன்பு மட்டுமே என்பதை இந்த கண்ணீர் காட்சி நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது. அந்த தாயுக்கும் குழந்தைக்கும் கண்ணீருடன் அஞ்சலி…
உயிர் தப்பிய தந்தைக்கும் மகளுக்கும் இந்த மிகப்பெரிய துயரை தாங்கும்
வலிமையை இறைவன் வழங்கட்டும். 🙏
Sunday, July 20, 2025
Amma !!!!!!!!!!!!!
சுகப்பிரசவம் எப்படின்னு கேள்விப்பட்டிருப்பீர்கள். 🤰
எழுத்தால் படித்து பார்த்து கண் கலங்கியதுண்டா?
இதைபடியுங்கள்!!! 🤱
மனது கலங்கும்..!!😥
முதலில் வலபக்க இடுப்பில் சுரீரென்ற குத்தல், பின்னர் இடைவெளி விட்டு மீண்டும், இடைவெளி விட்டு மீண்டும், இப்படியே தொடர்ந்து நடு வயிறு வலி ஆரம்பிக்கும் போது குழந்தை, தான் பிறக்கப் போகும் நேரத்தை முடிவு செய்துவிட்டது என்று அர்த்தம்...
புதிய உலகை காண வேண்டும் என்று குழந்தைகள் முடிவு செய்த பின், அதற்கு முதலில் இது வரை வாழ்ந்து வரும் கருவறை உலகில் தனக்கான வாழ்வாதரத்தை அழிக்கும் பனிக்குடத்தை அது உடைக்கும். அங்குதான் குழந்தை சுவாசிக்கும், நீந்திகொண்டிருக்கும்.
அதை உடைத்த பின் புதிய வாழ்வாதாரத்திற்கான வழி நோக்கி முன்னெடுக்கும் போது பிரசவ வலி உச்சத்தில் இருக்கும். (முழு பனிக்குட நீரும் வெளியேறும் முன் மருத்துவமனை சென்றுவிட வேண்டும்) மொத்த வயிறும் வலிக்கும், சீராக சுவாசிக்க முடியாது. அதிக பதட்டம், இந்த நேரத்தில் பெண் வேண்டுவதல்லாம் கணவனின் கரத்தை இறுகப் பற்றுதல் தான். அந்த நேரத்தில் வேறு யாரையும் தேடாது புருஷன் புருசன் புருசன் மட்டும்தான்.
முதலில் இனிமா கொடுத்து வயிற்றை சுத்தம் செய்வார்கள். ஏற்கனவே வயிறு வலி, இதுல இது வேற. இப்ப கால் இரண்டையும் விரித்து வைத்துக் கொள்ளச் செய்வார்கள். அப்போது வலி முதுகுத்தண்டை தாக்க ஆரம்பித்திருக்கும். எப்படி என்றால் கத்தியை எடுத்து முதுகுதண்டின் டிஸ்க்களுக்கு இடையில் சொருகினாள் எப்படி இருக்குமோ அப்படியான வலி. ஒரு நர்ஸ் நெஞ்சு மேல் ஏறி வயித்த பார்க்க உக்காந்து தன்னோட இரண்டு கால் முட்டுகளால் மேல்வயிற்றின் இரண்டு பக்கங்களில் இருந்தும் அழுத்தம் கொடுக்கும். கைகளால் மேல் வயிற்றை கீழாக தள்ளும்.
டாக்டர் முக்கு முக்குன்னு சொல்வார்கள், சீசேரியனில் மட்டும்தான் மயக்க மருந்து கொடுத்து பிரசவம் நடக்கும். அது சீசேரியன் கத்திய வச்சி அறுப்பாங்க அப்பறம் தையல் எல்லாம் போட வேண்டுமே அதனால் என்கின்றீர்களா? நிற்க சுகபிரசவத்திலும் தையல் போட வேண்டும் அது வயிற்றில் கிடையாது பிறப்புறுப்பு ஒரு குறிப்பிட்ட அளவிற்க்கு மேல் விரிவடையாத சூழல் இருக்கும் போது. கத்தரிப்பான் போன்ற தோற்றத்தில் தேங்காய் உரிக்கும் உபகரணம் பார்த்து இருக்கிறீர்களா? தேங்காயில் அதன் கூர்மையான முனை கொண்டு ஒரு குத்து குத்தி இரண்டாக பிளக்க வேண்டும். அதே மாதிரி ஒரு உபகரணம் கொண்டு பிறப்புறப்பில் செலுத்தி அதன் கைப்பிடியை விரித்து ஒரு திருக்கு.
அங்கயே கண்ணுரென்டும் சொருகிடும் செத்தே போய்டுவோம்னு தான் தோணும். ஆனா குழந்தையாட தலை வெளில தெரிது Push push push ன்னு சொல்ல, “டாக்டர் முடியல டாக்டர்” என்பாள். ஏம்மா உனக்கு வலிக்கிர மாதிரி தான் உன் குழந்தைக்கும் வழிக்கும் அதோட வலியை குறைக்கனும்னா நீ சீக்கிரம் முக்கி பிள்ளைய பெத்துக்கனும் அப்பறம் உன் இஷ்டம் னு சொல்லுவாங்க அப்போ வரும் ஒரு வெறி பாருங்க, நரம்புகள் முருக்கி உடம்பின் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி ஓரிடத்தில் குவித்து முப்பது நொடி அளவில் நீண்ட முக்குதல் முக்கி பிறப்புறுப்பை கிழித்துக்கொண்டு குழந்தை வந்து விழும்.
என்ன குழந்தை என்று சொல்லிய பின் குழந்தையை குளிப்பாட்ட கொண்டு போயிடுவாங்க. ஹப்படா என்று நிம்மதியில் கொஞ்சம் ஆசுவாசம் அடையும் போது கிழிந்த பிறப்புறப்பை டாக்டர் தைக்க ஆரம்பித்து இருப்பார். எது வரை உறுப்பு கிழிந்து இருக்கும் தெரியுமா? மலத்துவாரத்தின் மேற்பகுதி வரை. இந்த டாக்டர் அப்பயும் மயக்க ஊசி போடமாட்டார். அதெல்லாம் கொடுமையிலும் கொடுமை. அப்பறம் பெட் எல்லாம் மாத்தி புதுசா வார்ட் ரூம்ல கூட்டிட்டு போயி விட்ருவாங்க. Actually தூக்கிட்டு போயி குழந்தைக்கு பால் கொடுக்கனும்..
அந்த பச்சை குழந்தைக்கு கண்ணும் முழிச்சு இருக்காது பாலும் எப்படி உறுஞ்சி குடிக்கனும்னும் தெரியாது ஆனா பசில அழும் பார்க்கவே பாவமா இருக்கும். பாலை கொஞ்சம் பீச்சி அதோட வாய்ல விட்டுட்டு காதை தடவி கொடுத்தா உரிஞ்சி குடிக்க ஆரம்பிச்சிடும். இன்று வரைக்கும் தீராத ஆச்சரியமாக இருக்கிறது அது எப்படி காதை தடவினா உரிஞ்சு குடிக்க தோனுதுன்னு? எது எப்படியோ என்னிலுருந்து பிறந்த என்னுயிர் இன்னொருநான் எனக்கான பசியை என்னிடமே தீர்த்துக் கொள்வது போல இருக்கும் அந்தக் குழந்தையின் பால் குடித்தல். அது வரை உடல் அனுபவித்த கஷ்டங்களுக்கு மனதின் பாரம் குறையும்.
படிக்கும் போதே மனது கண்ணீரில் நனைகிறதா? அப்படியானால் இதை தாங்கும் பெண்...?🤰🤱
உண்மையில் தலையில் தூக்கி வைத்து கொண்டாடபட வேண்டிய ஓர் ஜீவன் என்றால் அது தாய்தான். 🤱அவளை கடைசி வரை ஒரு குழந்தையாக பார்த்து கொள்வது ஒவ்வொருவர் கடமை... 🥺🥺
Sunday, June 18, 2023
Ammaa - Balakumaran
அம்மா ஒரு ப்ராண ஸ்நேகிதி - பாலகுமாரன்