My God given daughter Renu started painting as a hobby and this is one She also wrote a poem on th theme Seeing the painting one of her friend also wrote a poem in Tamil
கண்ணா உனை நினைத்து
உன் அழகிய வதனத்தையும்
வனத்தையும் படைத்த களிப்பில்
கிளையில் படுத்து களைப்பில்
கண் மூடி லயித்து ரசிக்கிறாள்.
.
வாரணத்தின் தீண்டல் மரத்து..
வானரத்தின் நாவடக்கி..
மான் மொழி கேளாது ..
மச்ச மணம் முகராது..
புல் பூச்சிகள் பாராது..
கண்ணா உனை உணர்ந்து..
மனமலர்ந்து மரத்துக்கிளையில்..
கண் மூடி ரசிக்கிறாள்..
கண்ணனின் மூச்சு காற்று
புல்லாங்குழல் வழி நுழைய
அதனூடே வந்த காற்றில் கார்குழல் ஆட..
ஒலி அழகா ஒளி அழகாவென
கண் மூடி ரசிக்கிறாள்..
அவள் கண்ணும் அழகே..
நெஞ்சத்தில் உனை
தஞ்சமாக்கியவள் இவள்..
ராதா இல்லை மீரா இல்லை இவள்..
பாமா இல்லை ருக்மணி இல்லை இவள்..
அவர்களை விட மேல்..
எல்லை இல்லாதவள்..
அணு அணுவாய் இந்த ரேணு உன்னுள் வியாபித்திருப்பவள்..
And now hear a most relevent song in you tube
No comments:
Post a Comment