_நீங்கள் மதர் தெரேசாவை ஏன் எதிர்த்தீர்கள் ? ஏழைகளை காப்பாற்ற போவது யார் ? என்ற கேள்விக்கு ஓஷோவின் பதில்..._
_ஆசிரம வரவேற்பாளரை அணுகி விசாரித்தனர். அதற்கு அவர் 700 குழந்தைகள் தற்போது இருப்பதாகவும், விரும்பிய குழந்தையை நீங்கள் தத்தெடுக்கலாம் என கூறிவிட்டு, அதற்கான விண்ணப்ப படிவத்தை நிரப்ப கூறினார்._
_அவர்கள் நிரப்பிய படிவத்தை வாங்கிக்கொண்டு, இங்கேயே காத்திருங்கள் வருகிறேன் என கூறிவிட்டு உள்ளே சென்றார்._
_தெரேசாவிடம் தகவலை சொல்ல உள்ளே சென்றவர் நீண்ட நேரமாக திரும்பி வரவே இல்லை._
_சிறிது நேரம் கழித்து வெளியே வந்த மற்றொருவர் இவர்களிடம் சொன்னார்;_
_மன்னிக்கவும், நீங்கள் தத்தெடுக்க தற்போது எந்த குழந்தைகளும் எங்களிடம் இல்லை என்று..._
_அமெரிக்க தம்பதிகளுக்கோ அதிர்ச்சியாக இருந்தது._
_இப்போதுதான் சில நிமிடங்களுக்கு முன் 700 குழந்தைகள் இருப்பதாக சொன்னார்கள், அதற்குள் என்ன நடந்தது என்று வந்தவரிடம் கேட்டார்கள்._
_அதற்கு அவர் எனக்கொன்றும் தெரியாது, உங்களிடம் சொல்ல சொன்னதை நான் சொல்லிவிட்டேன் என கூறிவிட்டு கிளம்பிவிட்டார்._
_நடந்தது இதுதான்..._
_தத்தெடுக்க வந்தவர்கள் பிராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள்._
_அவர்கள் நிரப்பிய படிவத்தில் பிராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர் என நிரப்பியதே காரணமாக இருந்தது._
_ஒருவேளை அவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால் அவர்களுக்கு அப்போது அங்கேயே 700 குழந்தைகள் இருந்திருக்கும்._
_அவர்கள் பிராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர் என்பதால் அந்த 700 அனாதை குழந்தைகளும் திடீரென இல்லாமல் போய்விட்டனர்._
_நான் இதுபற்றி தெரேசாவை கடுமையாக விமர்சித்தது, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் அப்போது வெளியானது._
_இதுபற்றி தெரேசா எனக்கு பதில் கடிதம் அனுப்பினார்._
_இங்குள்ள குழந்தைகள் எல்லாமே கத்தோலிக்க கிறிஸ்தவ குழந்தைகளாக வளர்பவை._
_அவை பிராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களிடம் சென்றால், அவர்களது மனநிலை பாதிக்கப்படும் என தெரேசா கூறியிருந்தார்._
_நான் தெரேசாவுக்கு இவ்வாறு பதில் எழுத சொன்னேன்._
_கத்தோலிக்க குழந்தைகள், பிராட்டஸ்டண்ட் பெற்றோரிடம் வளர்ந்தால் அக்குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படும் என சொல்கிற நீங்கள்,_
_ஏன் இந்து, முகம்மதிய குழந்தைகளை கத்தோலிக்க மதத்திற்கு மாற்றி அவர்களின் மனநிலையை சிதைக்கின்றீர்கள் ? என்று..._
_மேலும் 21 வயதிற்கு மேல்தான் அவரவர் விருப்பபடி அவரவர் விரும்பும் மதங்களை பின்பற்றலாம்._
_நீங்கள் பிற மத குழந்தைகளை (இஸ்லாமிய, இந்து) கத்தோலிக்க மதத்திற்கு மாற்றுவது மாபெரும் குற்றம்._
_இது குழந்தைகளுக்கு எதிரான குற்றம் என்றும், இது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் எழுதி இருந்தேன்._
_இதை படித்த தெரேசா என் மீது பயங்கர கோபமடைந்தார்._
_பின்பு அவர் இதுபற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை என்றும்,_
_நான் உங்களை மன்னிக்க சொல்லி கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்றும் எழுதியிருந்தார்._
_இதற்கு பதிலாக நான் எனது கடைசி கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்._
_எனது அனுமதி இல்லாமல் எனக்காக கடவுளிடம் பிரார்த்திக்க நீங்கள் யார் ?_
_என் அனுமதியின்றி எனது ஆன்மீகத்தில் நீங்கள் எவ்வாறு தலையிடலாம் ?_
_இதுகுறித்து நீதிமன்றத்தில் சந்திக்கிறேன் என பதில் எழுதி இருந்தேன்._
_*#ஓஷோ* (நகல்பதிவு)_
_மதமாற்றம் பெரும் தேசிய அபாயம் என்பதே வரலாறு..._
Courtesy : Face book "RSS TAMILNADU"
All reactions:
3333
No comments:
Post a Comment